Home /News /national /

பிரதமரால் 15 நிமிடங்கள் காத்திருக்க முடியவில்லை.. விவசாயிகள் ஓராண்டு காத்திருந்தனர்.. சித்து விமர்சனம்

பிரதமரால் 15 நிமிடங்கள் காத்திருக்க முடியவில்லை.. விவசாயிகள் ஓராண்டு காத்திருந்தனர்.. சித்து விமர்சனம்

டெல்லி எல்லையில் விவசாயிகள் ஒன்றரை ஆண்டுகளாக முகாமிட்டிருந்தனர். அப்போதெல்லாம் ஊடகங்கள் எதுவும் சொல்லவில்லையே என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி எல்லையில் விவசாயிகள் ஒன்றரை ஆண்டுகளாக முகாமிட்டிருந்தனர். அப்போதெல்லாம் ஊடகங்கள் எதுவும் சொல்லவில்லையே என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி எல்லையில் விவசாயிகள் ஒன்றரை ஆண்டுகளாக முகாமிட்டிருந்தனர். அப்போதெல்லாம் ஊடகங்கள் எதுவும் சொல்லவில்லையே என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரதமர் மோடியால் 15 நிமிடங்கள் காத்திருக்க முடியவில்லை ஆனால், டெல்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டு காத்திருந்தனர் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து விமர்சித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் பதிண்டாவுக்கு விமானம் மூலம் நேற்று சென்றார். பின்னர் அங்கிருந்து ஹூசைனிவாலாவில் உள்ள தேசியத் தியாகிகள் நினைவிடத்துக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் செவல்வதாக இருந்தது. ஆனால் பதிண்டாவில் நேற்று மழை பெய்தது. இதனால் மோசமான வானிலையில் ஹெலிகாப்டர் இயக்குவதை தவிர்த்த பாதுகாப்பு அதிகாரிகள் ஹூசைனிவாலாவுக்கு சாலை மார்க்கமாக செல்ல கடைசி நேரத்தில் திட்டமிட்டு அதை செயல்படுத்தினர்.

    ஹூசைனிவாலாவில் இருந்து 30 கிலோமீட்டருக்கு முன்னதாக பிரதமர் சென்ற பாதையில் பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமரின் கார் மேம்பாலம் ஒன்றில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அவரின் நிகழ்ச்சி ரத்தானது. இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் பாதுகாப்பு குறைபாட்டுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    Also read:  பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

    உயிரோடு திரும்பி அனுப்பியதற்காக பஞ்சாப் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும்படி விமான நிலைய அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து, பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கும் பெரும் வார்த்தை போர் வெடித்தது.

    இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பிடிஐக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடிக்கு நான் கேட்க விரும்பவது என்னவென்றால், டெல்லி எல்லையில் விவசாயிகள் ஒன்றரை ஆண்டுகளாக முகாமிட்டிருந்தனர். அப்போதெல்லாம் ஊடகங்கள் எதுவும் சொல்லவில்லையே. ஆனால், உங்களால் 15 நிமிடங்கள் காத்திருக்க முடியவில்லை. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஃபெரோஸ்பூர் பொதுக்கூட்டத்திற்கு மிகக்குறைந்த அளவிலேயே தொண்டர்கள் வந்திருந்ததாலேயே பிரதமர் மோடி திரும்பிச் சென்றார் என்று கூறினார்.

    இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ஃபெரோஸ்பூரில் நடைபெற்ற பேரணியில் மக்கள் அதிகளவில் கலந்து கொள்ளாததால், பிரதமர் தனது பேரணியை ரத்து செய்தார். பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஊடகங்களின் கவனத்தை திசை திருப்புவதும், 70,000 நாற்காலிகளில் 500 பேர் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், அவர்கள் மத்தியில் உரையாற்றும் அவமானத்தை காப்பாற்றுவதற்கு ஒரே வழி என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Also read:  தடுப்பூசி போடாமல் நுழைந்த நோவக் ஜோகோவிச் நாடு கடத்தப்படுவார் - ஆஸ்திரேலிய அரசு
    Published by:Esakki Raja
    First published:

    Tags: PM Modi, Punjab

    அடுத்த செய்தி