Home /News /national /

'15 நிமிஷம் பிரதமர் காத்திருந்தது ஒரு பிரச்னையா, ஆனா விவசாயிகள்' - விளாசும் சித்து

'15 நிமிஷம் பிரதமர் காத்திருந்தது ஒரு பிரச்னையா, ஆனா விவசாயிகள்' - விளாசும் சித்து

Modi in Punjab

Modi in Punjab

PM Modi Security Breach: நீங்கள் 15 நிமிடம் தான் காத்திருந்தீர்கள். ஏன் இந்த இரட்டை வேடம்?” என சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் அரசு மீது எழுந்த விமர்சனங்களுக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பதிலடி தந்துள்ளார்.

    ஒரு 15 நிமிட காத்திருப்பின் மூலம் பிரதமர் "சிக்கல்" அடைந்தார், ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒரு வருடம் காத்திருந்தனர் என பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்த விவகாரம் தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து பேசியுள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஜனவரி 5ம் தேதியன்று பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பெரோஸ்பூருக்கு சென்ற போது வழியில் திடீரென விவசாயிகள் போராட்டம் நடத்தியதன் காரணமாக அங்குள்ள மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் மோடி காத்திருக்க வைக்கப்பட்டிருந்தார். இதனால் அவருடைய பயணத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

    நாட்டின் உச்சபட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கக் கூடிய பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள இந்த குறைபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசு மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.

    Also read: ‘மோடி வாழ்க’ என கோஷமிட்டு பாஜகவினரிடம் இருந்து விடுபட்ட பஞ்சாப் துணை முதல்வர் - வைரல் வீடியோ

    பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள், விவிஐபியின் தீவிர பாதுகாப்பு அபாயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.

    TKSS' makers sack Navjot Singh Sidhu for his comment on Pulwama terror  attack
    நவ்ஜோத் சிங் சித்து


    காங்கிரஸ் அரசு மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில்,  "நான் பிரதமரிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய நம்முடைய விவசாய சகோதரர்கள் டெல்லி மாநில எல்லைகளில் ஒரு வருடமாக தங்கியிருந்தனர். இது தொடர்பாக உங்கள் ஊடகங்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் நேற்று (ஜனவரி 5) நீங்கள் 15 நிமிடம் தான் காத்திருந்தீர்கள். ஏன் இந்த இரட்டை வேடம்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அன்றைய தினம் கூட்டத்தில் குறைந்த அளவில் கூட்டம் கூடியதால் அந்த விவகாரத்தை திருப்புவதற்காக இந்த ஒட்டுமொத்த விவகாரமும் நடைபெற்றுவருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    Also read:  தடுப்பூசி போடாமல் நுழைந்த நோவக் ஜோகோவிச் நாடு கடத்தப்படுவார் - ஆஸ்திரேலிய அரசு

    பிரதமர் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் குறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி, பெரோஸ்பூர் கூட்டத்தில் கலந்துகொள்ள மிக குறைந்த அளவிலேயே கூட்டம் வந்திருந்ததால் தான் பிரதமர் தனது பயணத்தை ரத்து செய்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Arun
    First published:

    Tags: Narendra Modi, Punjab

    அடுத்த செய்தி