ஒரு வாரம் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்கிறார் பிரதமர் மோடி..!

செப்டம்பர் 23-ம் தேதி நியூயார்க் நகர் செல்லும் மோடி ஐநா சபையின் செயலாளர் ஆண்டோனியோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Web Desk | news18
Updated: September 13, 2019, 1:02 PM IST
ஒரு வாரம் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்கிறார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: September 13, 2019, 1:02 PM IST
வருகிற செப்டம்பர் 21 முதல் 27-ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை மத்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.

செப்டம்பர் 22-ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய மக்களுடன் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மோடி உடனான உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

டெக்சாஸ் இந்தியா ஃபோரம் அமைப்பு, என்ஆர்ஜி ஸ்டேடியத்தில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. 2014-ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராகப் பதவியேற்றப் பின்னர் இரண்டு முறை அமெரிக்கவாழ் இந்தியர்கள் உடன் மோடி கலந்துரையாடியுள்ளார். வருவது மூன்றாம் பெரும் நிகழ்வு ஆகும். இதற்கு முன்னர் நடந்த இரு கலந்துரையாடல் மாநாடும் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற நிகழ்வு ஆகும்.


செப்டம்பர் 23-ம் தேதி நியூயார்க் நகர் செல்லும் மோடி ஐநா சபையின் செயலாளர் ஆண்டோனியோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி காலநிலை குறித்துப் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: பேரிடர் தடுப்புக்கும் காலநிலை மாற்றத்துக்கும் மூன்று செயற்கைக்கோள்கள்! வெற்றிகரமாக ஏவியது சீனா

இஸ்ரோ சிவனின் கதை!

Loading...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...