பிரதமர் மோடி இன்று மாலத்தீவு பயணம்!

இலங்கைக்கு நாளை செல்லும் பிரதமர் அதிபரை சந்தித்துவிட்டு திருப்பதிக்கு வந்து வழிபாடு நடத்துகிறார்.

பிரதமர் மோடி இன்று மாலத்தீவு பயணம்!
நரேந்திர மோடி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: June 8, 2019, 8:24 AM IST
  • Share this:
ஒரு நாள் பயணமாக கேரளாவுக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, குருவாரூர் கோயிலில் இன்று வழிபாடு நடத்துகிறார். இதையடுத்து, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் மோடி, முதலாவது வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவுக்கு செல்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, கேரளாவின் கொச்சிக்கு நேற்றிரவு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையில் மோடி தங்கினார். கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம், குருவாயூருக்கு இன்று காலை செல்லும் மோடி, கிருஷ்ணன் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி தனது எடைக்கு இணையாக தாமரை மலர்களை காணிக்கையாக வழங்குகிறார். இதற்காக நாகர்கோவிலிலிருந்து 112 கிலோ தாமரை மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.


இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவிக்க உள்ளார்.

கேரள பயணத்தை முடித்துவிட்டு மாலத்தீவு செல்லும் பிரதமர் இன்றும்  நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். இலங்கைக்கு நாளை செல்லும் பிரதமர் அதிபரை சந்தித்துவிட்டு திருப்பதிக்கு வந்து வழிபாடு நடத்துகிறார்.

Also see... சேலத்தில் 3 பேருந்துகள் மோதிக்கொண்ட
Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading