ஹோம் /நியூஸ் /இந்தியா /

தீபாவளி கொண்டாட இன்று அயோத்தி செல்லும் பிரதமர் மோடி..15 லட்சம் அகல் விளக்கு ஏற்றும் சாதனை நிகழ்வை தொடங்கி வைக்கிறார்!

தீபாவளி கொண்டாட இன்று அயோத்தி செல்லும் பிரதமர் மோடி..15 லட்சம் அகல் விளக்கு ஏற்றும் சாதனை நிகழ்வை தொடங்கி வைக்கிறார்!

பிரதமர் மோடி அயோத்தி பயணம்

பிரதமர் மோடி அயோத்தி பயணம்

தீபாவளி கொண்டாட்டத்திற்கா ஆயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு உலக சாதனை முயற்சியாக 15 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றும் நிகழ்வை முன்னின்று தொடங்கி வைக்கிறார் .

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Ayodhya, India

  உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் விளக்குள் ஏற்றும் வைபவம் நடைபெறும். நடப்பாண்டில் 6வது தீபோத்சவம் நடைபெறுகிறது. மாநிலத்தில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்ததையொட்டி, பிரம்மாண்டமாக தீபாவளியை கொண்டாட அம்மாநில அரசு முடிவு செய்தது.

  அதன்படி இந்தாண்டு அயோத்தியில் தீப உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநில சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் இவ்விழாவால், அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நேற்று நடைபெற்ற லேசர் ஒளி கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

  விழாவின் நிறைவு நாளான இன்று, ராமர் கோயில் கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். இதைத் தொடர்ந்து சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று வழிபாடு நடத்துகிறார். இந்நிகழ்ச்சியில், உலக சாதனை முயற்சியாக 15 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

  இதையும் படிங்க: ’ஏசியை இப்படி பயன்படுத்தாதீங்க... ப்ளீஸ்..! - சர்வதேச சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்வில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

  இதற்காக அயோத்தி, லக்னோ, கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மண் விளக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 22,000 தன்னார்வளர்கள் பங்கேற்று பிரதமர் மோடி முன்னிலையில் இந்த தீபம் ஏற்றும் நிகழ்வை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, சரயு நதிக்கரையில் நடக்கும் தீப ஆரத்தி, லேசர் நிகழ்ச்சியையும் பிரதமர் பார்வையிட உள்ளார். இந்நிகழ்ச்சியின் போது, ரூ.4,000 கோடி மதிப்பிலான 66 திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

  பொதுவாக ஆண்டுதோறும் தீபாவளி அன்று பிரதமர் மோடி எல்லையில் ராணுவ வீரர்களுடன் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நாளையும் அதேபோல் பிரதமர் ராணுவ வீரர்களுடன் கொண்டாடவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் குறித்த தகவல் அறிவிக்கப்படவில்லை.

  Published by:Kannan V
  First published:

  Tags: Ayodhya, Deepavali, Diwali, PM Modi