பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9-வது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் வரையில் 68.76 கோடி பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9-வது தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கிறார். இதன்படி 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்ததா என எப்படி தெரிந்து கொள்வது?
1. பிரதமரின் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்லுங்கள்
2. வலதுபுறத்தில் உள்ள ‘Farmers Corner’ என்பதை க்ளிக் செய்க
3. அதில் ‘Beneficiary Status’ என்பதை க்ளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
4. திறக்கப்படும் புதிய பக்கத்தில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் எல்லது மொபைல் எண் என ஏதேனும் ஒன்றை உள்ளீடு செய்யவும்
5. பின்னர் ‘Get Data’ என்பதை க்ளிக் செய்க
6. இப்போது உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்ததா? எப்போது கடைசியாக பணம் வந்தது என பல தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delta Farmers, Farmers, Govt Scheme, Modi, News On Instagram, Welfare scheme