பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘செராவீக்’ விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘செராவீக்’ விருது

மோடி

செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்விராய்ன்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்' எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில், சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கு, விருது வழங்கப்படும். அதன்படி, இந்த விருது, பிரதமர் மோடிக்கு வழங்கி, கவுரவிக்கப்பட உள்ளது.

 • Share this:

  அமெரிக்காவில், 'செராவீக்' எனப்படும், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில், ஆற்றல் துறையை சேர்ந்த தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், உலக தலைவர்கள் என, பலரும் பங்கேற்று சிறப்புரையாற்றுவர்.

  அந்த மாநாட்டில், பருவநிலைக்கான அமெரிக்காவின் சிறப்பு துாதர் ஜான் கெர்ரி, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், 'பிரேக்த்ரூ எனர்ஜி' அமைப்பின் நிறுவனருமான பில்கேட்ஸ், சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைவர் அமின் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்று, பேச உள்ளனர்.

  இதற்கிடையே, கடந்த, 25ம் தேதி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இணைந்து, கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், 'ஜம்மு - காஷ்மீர் மற்றும் இதர பகுதிகளில் அமைந்துள்ள, சர்வதேச எல்லை கோட்டிற்கு அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றி நடந்து கொள்வோம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

  போர் நிறுத்தம் தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் அறிவிப்பை அமெரிக்க எம்.பி. கிரிகரி மீக்ஸ் வரவேற்றுள்ளார்.

  இது குறித்து அவர் கூறும்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றுவது தொடர்பாக, இருதரப்பும் வெளியிட்டு உள்ள அறிவிப்பை, நான் வரவேற்கிறேன். இந்த முதல் முயற்சியால், எல்லை பகுதியில் நிலவும் பதற்றம் தனியும் என நம்புகிறேன், என்று தெரிவித்தார்.
  Published by:Muthukumar
  First published: