ஹோம் /நியூஸ் /இந்தியா /

அக்டோபர் 1ஆம் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அக்டோபர் 1ஆம் தேதி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இது குறித்து பேசிய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், இதற்கு ரூ.3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அக்டோபர் 1ம் தேதி நடைபெறவுள்ள இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று 5ஜி சேவையை தொடங்கி வைக்கவுள்ளார்.

  ஆசியாவின் மிக பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான இந்திய மொபைல் காங்கிரஸ் மற்றும் மத்திய தொலை தொடர்பு அமைச்சம் இணைந்து, 5ஜி தொடக்க விழா நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

  முதற்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலை தொடர்பு அமைச்சம் அறிவித்திருந்தது. சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

  இதையும் வாசிக்க: சட்டப்பேரவையில் புகையிலை பயன்படுத்திய பாஜக எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ

  இது குறித்து பேசிய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், இதற்கு ரூ.3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்தார். இன்னும் 2, 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

  மேலும் அக்டோபர் 1ஆம் தேதி, 5ஜி தொடக்க விழா நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா நிறுவன தலைவர் ரவிந்தர் தாக்கூர் ஆகியோர் பிரதமர் மோடியுடன் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: 5G technology, Mukesh ambani, PM Modi