முதல்கட்ட உலகத் தலைவர்கள் பிப்ரவரி 12-ம் தேதி மெய்நிகர் காணொளி காட்சி மூலம் விவாதிக்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஷிண்டே சுகா ஆகியோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்களுடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ளவுள்ளார். மெய்நிகர் காணொளி காட்சியாக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசப்படவுள்ளது.
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை நல்குவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. தற்போதுள்ள சவாலானா காலகட்டம் குறித்தும், காலநிலை மாற்றம், கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு, ஆபத்தான தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
அதேபோல, கொரோனா தொற்று, அனைவருக்கும் வாங்கக் கூடிய அளவிலான தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.