கொரோனா பாதிப்பு தொடர்பாக முதல்வர்களுடன் மோடி நாளை ஆலோசனை

கொரோனா பாதிப்பு தொடர்பாக முதல்வர்களுடன் மோடி நாளை ஆலோசனை

பிரதமர் மோடி.

கொரோனா பாதிப்பு தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

  • Share this:
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தநிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனாவின் பாதிப்பு கட்டுங்கடங்காமல் உள்ளது. இந்தியாவில் பதிவாகும் மொத்த கொரோனா எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் மட்டும் 54 சதவீதம் பதிவாகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் முதல் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளது.

அதேபோல, தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 500-க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,000-த்தை நெருங்கியுள்ளது. இந்தநிலையில், பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை செய்யவுள்ளார்.

அதில், கொரோனா இரண்டாவது அலை குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.


உடனடி செய்தி இணைந்திருங்கள்...
Published by:Karthick S
First published: