ஹோம் /நியூஸ் /இந்தியா /

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

தொடக்க விழாவில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா நிறுவன தலைவர் ரவிந்தர் தாக்கூர் ஆகியோர் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாட்டின் புதிய தகவல் தொழில்நுட்ப சேவையில் அடுத்த பாய்ச்சலாக இருக்கும் வகையில், 5ஜி தகவல்தொடர்பு சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இன்று காலை டெல்லி பிரகதி மைதானத்தில் இந்த தொடக்க விழா நடைபெறுகிறது.

  நாட்டில் தற்போது 4ஜி சேவை நடைமுறையில் உள்ள நிலையில், மேம்படுத்தப்பட்ட 5ஜி தொழில்நுட்பம் மூலம் தடையற்ற சேவை, உயர் தரவு விகிதம், விரைவான செயல்பாடு ஆகியவற்றுடன் மிகவும் நம்பகமான தகவல்தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறனை அதிகரிப்பு ஆகியவை கிடைக்கும்.

  5ஜி தொடக்க விழா நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல், வோடஃபோன் ஐடியா நிறுவன தலைவர் ரவிந்தர் தாக்கூர் ஆகியோர் பிரதமர் மோடியுடன் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவை தொடக்க விழாவில், மும்பையில் உள்ள பள்ளி ஆசிரியரை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மூன்று வெவ்வேறு நகரங்களில் இருக்கும் மாணவர்களுடன் இணைத்து தொடர்புகொள்ள வைக்கிறது. இதன் மூலம், கல்வி வசதியானது தொலைவை கடந்து மாணவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை இந்த தொழில்நுட்ப வசதி செய்து காட்டவுள்ளது. இதேபோல், ஏர்டெல், வோடாபோன் போன்ற நிறுவனங்களும் தங்கள் சேவை வசதிகளை டெமோ காட்டவுள்ளன.

  முதற்கட்டமாக சென்னை, அஹமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

  இதையும் படிங்க: பைக், கார் EMI.. வீட்டுக்கடன் வட்டி உயரும் அபாயம் - 4ஆவது முறையாக உயர்ந்த ரெப்போ வட்டி

  இன்றைய நிகழ்வில் இந்திய மொபைல் காங்கிரஸின் (ஐஎம்சி) ஆறாவது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐஎம்சி 2022 "புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற தலைப்பில் அக்டோபர் 1 முதல் 4 ஆம் தேதி வரை கருத்தரங்கு நடைபெற உள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரைவான நடைமுறை மற்றும் பரவலில் இருந்து வெளிப்படும் தனித்துவமான வாய்ப்புகளை விவாதிக்கவும், காட்சிப்படுத்தவும் முன்னணி சிந்தனையாளர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை ஒன்றிணைக்கும்.

  Published by:Kannan V
  First published:

  Tags: 5G technology, Mukesh ambani, PM Modi, Reliance Jio