ஹோம் /நியூஸ் /இந்தியா /

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் மெகா திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் மெகா திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

மெகா வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

மெகா வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

நாடு முழுவதும் பல்வேறு அரசு துறை பணிகளுக்கு தேர்வான 75 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கவுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் 'ரோஸ்கர் மேளா' என்ற மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

  இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி உரையாற்ற உள்ளார்.

  இந்த திட்டத்தின்படி நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், 38 மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிகளில் சேருவார்கள். இந்த வேலைவாய்ப்பு இயக்கத்தில் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்றவை மூலம் தேர்வுகள் நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய அரசின் 38 அமைச்சகங்கள் /துறைகளில் பணிககளில் நாடு முழுவதும் இருந்து தேர்வில் வெற்றி பெற்று 75,000 பேர் புதிதாக பணி அமர்த்தப்படவுள்ளார்கள். இவர்கள் குரூப்-ஏ, குரூப்-பி (அரசிதழ் பதிவு பெற்றவர்கள்), குரூப்-பி (அரசிதழ் பதிவு பெறாதவர்கள்), குரூப்-சி என பல்வேறு நிலைகளில், இவர்கள் அரசுப் பணியில் சேர்வார்கள்.

  இதையும் படிங்க: ’ஏசியை இப்படி பயன்படுத்தாதீங்க... ப்ளீஸ்..! - சர்வதேச சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்வில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

  மத்திய ஆயுதப்படை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், கீழ்நிலை எழுத்தர்கள், சுருக்கெழுத்தர்கள், தனி உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பலவகை பணி செய்வோர் (எம்டிஎஸ்) உள்ளிட்ட பதவிகளுக்கான நியமிக்கப்படவுள்ளனர் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2023 மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்பு என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Government jobs, Jobs, PM Modi