• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியை இன்று தொடங்கி வைகிறார் பிரதமர் மோடி!

பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியை இன்று தொடங்கி வைகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரதமர் மோடி வாரணாசியில் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி அவரது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார். பாஜகவை பலப்படுத்தும் நோக்கில் உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கி வைக்கிறார்.

பா.ஜகவின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உறுப்பினர் சேர்ப்பு பணி நடக்கிறது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ராம் நாயக்குடன்,  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்கிறார்.

அதனைத்  தொடர்ந்து முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் திருவுருவ சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.



தொடர்ந்து மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்றைய உறுப்பினர் சேர்ப்பு மூலம் பல மக்களை இணைத்து பா.ஜ., குடும்பத்தை வலுவடைய செய்வோம் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.



பாஜகவில் உறுப்பினராக சேர வேண்டும் எனில் மிஸ்டுகால் கொடுத்தால் போதுமானது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... வரி விதிப்பு எவ்வாறு கையாளப்படுகிறது? புறநானூறு கூற்றை தமிழில் பேசி அவையை கலகலக்க வைத்த நிர்மலா





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: