இமாச்சலில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதையான அடல் சுரபங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை திறந்துவைக்கிறார்.

இமாச்சலில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: October 2, 2020, 7:31 PM IST
  • Share this:
இமாச்சலபிரதேச மாநிலம் மணாலி - லஹோல் ஸ்பிதி ஆகிய இடங்களை இணைக்கும் இந்த சுரங்கப்பாதையின் அளவு 9.02 கிலோமீட்டராகும்.

இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்தால் 4 முதல் 5 மணி நேர பயண நேரம் மிச்சமாகும். 46 கிலோமீட்டர் மலைப்பாதையை தவிர்த்து எளிதாக இந்த சுரங்கப்பாதை வழியாக மக்கள் செல்ல முடியும்.Also read... எனது தந்தையின் சமூகப் பணியையும் அரசியல் பணியையும் தொடர்ந்து செய்வேன் - நடிகர் விஜய் வசந்த்


இந்த சுரங்கப்பாதையில் ஒரு நாளைக்கு 3ஆயிரம் கார்கள், ஆயிரத்து 500 சரக்கு லாரிகள் வரை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஒவ்வொரு 60 மீட்டர் தூரத்திலும் அதிநவீன கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 150 மீட்டர் தூரத்துக்கும் ஒரு அவசர தொலைபேசி வசதியும் செய்யப்பட்டுள்ளன.
First published: October 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading