• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • PM Modi In Varanasi | பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி பயணம்..

PM Modi In Varanasi | பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி பயணம்..

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அவரது சொந்த தொகுதியான வராணாசிக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.

  • Share this:
    பிரதமர் மோடி முதலில் இன்று மிர்சாமுரத் என்ற இடத்தில் 5000 பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங் கிவைக்கிறார். பின்னர், அங்கு ஹாண்டியா - ராஜதலாப் இடையே 2447 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து பிரம்மாண்டாக கட்டப்பட்டு வரும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று பணிகளை பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார். வாரணாசியில் வெகுவிமர்சியாக கொண்டாடப்படும் கார்த்திகை பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    மேலும் அங்கு கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். அதற்காக கங்கை கரையோரம் 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு பிரம்மாண்டமாக விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் மீண்டும் படகில் ஏறி, சாரநாத் செல்கிறார். அங்கு ஒலி, ஒளி காட்சியை பார்வையிடுகிறார். இரவு, டெல்லி திரும்புகிறார்.

    மேலும் படிக்க... Rajinikanth | Rajini Makkal Mandram | மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த்.. நாளை ரசிகர்களுடன் சந்திப்பு எனத் தகவல்..

    பிரதமரின் நிகழ்ச்சிகளில், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: