ஹோம் /நியூஸ் /இந்தியா /

எய்ம்ஸ் மருத்துவமனை, 6-வது வந்தே பாரத் ரயில் திட்டம் - மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்!

எய்ம்ஸ் மருத்துவமனை, 6-வது வந்தே பாரத் ரயில் திட்டம் - மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

நாக்பூர் நகரையும் பிலாஸ்பூரையும் இணைக்கும் வகையில் நாட்டில் 6ஆவது வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிராவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி, நாக்பூர் நகரையும் பிலாஸ்பூரையும் இணைக்கும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதுவரை நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கத்தில் உள்ள நிலையில், இன்று பிரதமர் 6ஆவது வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து, நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை தொடங்கி வைத்து, இரண்டாம் கட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். மிகான் பகுதியில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும், பிரதமர் மோடி சம்ருத்தி நெடுஞ்சாலை திட்டத்தின் முதல் கட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்த மருத்துவமனைக்கு பிரதமர் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, கோவாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ப்பு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் கண்ணோட்டத்தின்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபா சர்வதேச விமானநிலையத்திற்கு, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த விமான நிலையம் ரூ.2,870 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

First published:

Tags: AIIMS Hospital, PM Modi, Vande Bharat