ஹோம் /நியூஸ் /இந்தியா /

மொத்த ஊருக்குமே சோலார் பவர்! நாட்டின் முதல் சோலார் கிராமம்! பிரதமர் அறிவித்த குஜராத் வில்லேஜ்!

மொத்த ஊருக்குமே சோலார் பவர்! நாட்டின் முதல் சோலார் கிராமம்! பிரதமர் அறிவித்த குஜராத் வில்லேஜ்!

குஜராத்தில் நாட்டின் முதல் சோலார் கிராமம்

குஜராத்தில் நாட்டின் முதல் சோலார் கிராமம்

கிராமத்தில் சுமார் 1,300 வீடுகள் உள்ள நிலையில் அனைத்து வீட்டின் கூரைகளிலும் சோலார் பேனல்கள் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  நாட்டின் முதல் சூரிய மின் ஆற்றல் கிராமமாக குஜராத் மாநிலத்தின் மோதேரா கிராமத்தை பிரதமர் மோடி இன்று அறிவிக்கிறார். இந்த கிராமம் அம்மாநிலத்தின் மேஷ்னா மாவட்டத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணத்திற்காக பிரதமர் மோடி இன்று வருகை தருகிறார். அப்போது மோதேரா கிராமத்தை முழுமையாக சூரிய மின் ஆற்றல் மூலம் இயங்கும் நாட்டின் முதல் கிராமமாக அறிவிக்கவுள்ளார். இதன் மூலம் நாட்டின் முதல் மாற்று எரிசக்தி மூலம் மட்டுமே இயங்கும் கிராமமாக மோதேரா உருவெடுக்கவுள்ளது.

  இந்த கிராமத்தில் சுமார் 1,300 வீடுகள் உள்ள நிலையில் அனைத்து வீட்டின் கூரைகளிலும் சோலார் பேனல்கள் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த மெகா திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து ரூ.80.66 கோடி செலவில் நிறைவேற்றியுள்ளது. பகல் நேரத்தில் சோலார் பேனல்கள் மூலமும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் BESS அதாவது சூரிய ஆற்றலை சேமித்து வைத்த பேட்டரி மூலமும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

  இந்த திட்டத்திற்காக 12 ஹெக்டேர் நிலப்பரப்பு தேவைப்பட்டது எனவும், இதன் மூலம் கிராம மக்களின் மின்சாரக் கட்டணம் 60 முதல் 100 சதவீதம் வரை சேமிக்கப்படும் அரசு தெரிவித்துள்ளது. இந்த மோதேரா கிராமத்தில் உலகப் புகழ் பெற்ற சூரிய கடவுள் கோயில் உள்ளது. அதை குறியீடாகக் கொண்ட இந்த கிராமத்தில் மெகா சூரிய மின்திட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் இந்த கோயிலிலும் சோலார் ஆற்றல் மூலம் இயங்கும் 3டி புரோஜெஷன் லைட் ஷோ நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.

  இதையும் படிங்க: பிடித்த யூடியூபரை பார்க்க 300 கிமீ தூரம் சைக்களில் சென்ற சிறுவன்.. கடைசியில் ட்விஸ்ட்

  இந்த திட்டம் குறித்து பேசியுள்ள குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பாடேல், "பிரதமர் மோடியின் தூய்மையான மின்சார உற்பத்தி என்ற கனவு திட்டத்தை குஜராத் முன்னெடுத்து செல்வதில் மகிழ்ச்சி. 2030க்குள் நாட்டின் 50 சதவீத மின் தேவையை மாற்று எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை நாம் நிச்சயம் அடைவோம்" என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Gujarat, PM Modi