Home /News /national /

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது - முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது - முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

மோடி

மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

    காலை 11 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பருவமழை, அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் ஊரடங்கு தளர்வுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பேசப்பட உள்ளதாக தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே வரும் 8-ஆம் தேதி சில தளர்வுகள் அனுமதிக்கப்படும் என அறிவித்த நிலையில் அதன் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க...

    சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று







    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: PM Modi, Union cabinet Ministry

    அடுத்த செய்தி