முகப்பு /செய்தி /இந்தியா / பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்.. முதலமைச்சர்கள் ஸ்டாலின், கேசிஆர் பங்கேற்கவில்லை

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்.. முதலமைச்சர்கள் ஸ்டாலின், கேசிஆர் பங்கேற்கவில்லை

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்

Niti Aayog: கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகிள்ளது.

  • Last Updated :
  • Delhi | Tamil Nadu

நிதி ஆயோக் அமைப்பின் ஏழாவது நிர்வாகக் கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெ ல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில் நிதி ஆயோக் கூட்டம்  நடைபெறவுள்ளது.வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் முதல் முறையாக தற்போது இந்த கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை கவர்னர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று கருணாநிதி நினைவு நாள் என்பதால் நினைவு நாள் தொடர்பாான நிகழ்வுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனால், தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், மாநிலத்தின் முதல்வர் தான் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் என்பதால், அவர் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும், துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதையும் படிங்க: 7 மாநிலங்களில் தலைதூக்கும் கொரோனா பரவல்: சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

அதேபோல், இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளுக்கு மதிப்பு அளிக்காமல் நடத்தும் நிதி ஆயோக் கூட்டம் தேவையில்லாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநில அரசுக்கு தேவையானபடி நிதி ஆயோக் திட்டங்களை மாற்றி அமைக்கும் வழிமுறைகளும் மத்திய அரசிடம் இல்லை என்றும், இதில் பங்கேற்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றும் சந்திரசேகர ராவ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

top videos

    கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகிள்ளது.

    First published:

    Tags: Chandrashekar Rao, CM MK Stalin, Niti Aayog, PM Modi, PM Narendra Modi