பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி

தொலைத்தொடர்பு அமைச்சகங்களால் முடிக்கப்பட்ட பணிகள் குறித்த ஆய்வும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

 • Share this:
  மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

  டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில், நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்த விரிவான விவாதம் நடைபெறும் என தெரிகிறது.கொரோனா அடுத்த அலை வந்தால் அதனை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தடுப்பூசித்திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் விவாதிக்கப்படும்.

  சாலை போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால் முடிக்கப்பட்ட பணிகள் குறித்த ஆய்வும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்களுடன் அவர்களது அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு வாரத்துக்கு முன்பு பிரதமர் மோடி கூட்டங்கள் நடத்தினார். அதைத் தொடர்ந்து தற்போது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அமைச்சரவையில் மாற்றம், விரிவாக்கம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் நடக்கும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: