• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஜம்மு எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

ஜம்மு எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாளியை கொண்டாடுகிறார் மோடி

இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாளியை கொண்டாடுகிறார் மோடி

  • Last Updated :
  • Share this:
    ஜம்மு எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை கொண்டாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ரஜவ்ரி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2014-ல் மோடி முதன்முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அதுமுதற்கொண்டு தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவத்தினருடன் அவர் கொண்டாடி வருகிறார். கடந்த ஆண்டு ராஜஸ்தானில் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற மோடி, ராணுவத்தினருடன் தீபங்களை ஏற்றினார்.

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெறவில்லை.தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகளையும், பட்டாசுகளையும் வாங்கி குவித்து வருகின்றனர். இருப்பினும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே கொரோனா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மோடி, ராணுவத்தினருடன் தீபாவளியை கொண்டாடுவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் அவர் ஜம்முவின் ரஜவ்ரி பகுதியில் ராணுவத்தினருடன் தீபாவளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    பூன்ச் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், மோடி ஜம்முவுக்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நடைபெற்று வரும் மோதல் இன்றுடன் 23-வது நாளை எட்டியுள்ளது.

    பிரதமர் மோடியின் ஜம்மு பயணம் ராணுவத்தினருக்கும் உற்சாகம் அளிப்பதாக அமையும் என்றும், எந்த அச்சுறுத்தலுக்கும் இந்தியா அஞ்சாது என்பதை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்துவதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: