பன்னாட்டு பாரதி திருவிழா இன்று தொடக்கம்.. பிரதமர் பங்கேற்று சிறப்புரை..

பன்னாட்டு பாரதி திருவிழா இன்று தொடக்கம்.. பிரதமர் பங்கேற்று சிறப்புரை..

பிரதமர் நரேந்திர மோடி

மகாகவி பாரதியார் பிறந்தநாளையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ‘பன்னாட்டு பாரதி திருவிழா’ இன்று தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.

  • Share this:
    மகாகவி பாரதியின் தேசிய உணர்வுகளை முன்னிறுத்தும் வகையில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதியார் புகழை உலகம் போற்றும் வகையில் பன்னாட்டு பாரதி திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டப்பட்டிருப்பதாக வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி தெரிவித்திருந்தார்.

    அதன்படி, சென்னையில் இன்று நடைபெறும் பன்னாட்டு பாரதி திருவிழா தொடக்க நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் இணைந்து, பிரதமர் சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு வானவில் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் படிக்க...முண்டாசு கவிஞனின் பிறந்தநாள் இன்று

    ஆண்டு தோறும் பாரதியாரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வானவில் பண்பாட்டு மையம், இந்த ஆண்டு 10 நாட்களுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளது. 16ம் தேதி சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்கிறார்.

    இந்த 10நாள் நிகழ்ச்சி லண்டன், பாரிஸ், மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா, கலிபோர்னியா, சிகாகோ போன்ற வெளிநாடு வாழ் பாரதியார் பக்தர்களாலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழும் பாரதியார் பக்தர்களாலும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Vaijayanthi S
    First published: