• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதியுதவி இன்று வழங்கப்படுகிறது...

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதியுதவி இன்று வழங்கப்படுகிறது...

பிரதமர் நரேந்திர மோடி. | கோப்புப் படம்.

பிரதமர் நரேந்திர மோடி. | கோப்புப் படம்.

கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 3வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 18 ஆயிரம் கோடி உதவித் தொகையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.

  • Share this:
    பிரதமரின் 'கிசான் சம்மான்' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    இந்த ஆண்டுக்கான மூன்றாவது தவணையாக, ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை வழங்கும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், 9 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் பறிமாற்றம் செய்யப்படும்.

    தொடர்ந்து, ஆறு மாநில விவசாயிகளுடன் பிரதமர் பேசுகிறார். இத்திட்டத்தின் பயன் மற்றும் தங்கள் நலனுக்காக, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த கருத்துகளை, விவசாயிகள் பிரதமருடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

    மேலும் படிக்க: என்.எல்.சி அனல்மின் நிலைய விபத்திற்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

    இந்த நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். சென்னை மறைமலைநகரில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய தகவல்ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: