• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Mann Ki Baat | பிரதமர் நரேந்திர மோடி இன்று மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரை

Mann Ki Baat | பிரதமர் நரேந்திர மோடி இன்று மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரை

பிரதமர் மோடி.

பிரதமர் மோடி.

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். இது இந்த ஆண்டிற்கான முதல் மன் கி பாத் நிகழ்ச்சியாகும்.

  • Share this:
    கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று 11 மணிக்கு தொடங்க இருக்கிறது . அதில் வானொலியில் மோடி உரையாற்ற உள்ளார். இதில் கொரோனா தடுப்பூசி மற்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் படிக்க... தங்கமாக மாறும் கருங்கல் - 22 பேர் சிக்கியது எப்படி?

    அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது. இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 73-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: