”ஹரியானா, மஹாராஷ்டிரா மக்கள் தீபாவளி பரிசளித்துள்ளனர்” தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேச்சு

”ஹரியானா, மஹாராஷ்டிரா மக்கள் தீபாவளி பரிசளித்துள்ளனர்” தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: October 24, 2019, 8:55 PM IST
  • Share this:
தீபாவளி பண்டிகைக்கு மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மக்கள் பரிசளித்துள்ளனர் என்று தேர்தல் முடிவுகள் பற்றி பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மற்றும் அரியானா தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு கடந்த தேர்தலை விட சரிவு ஏற்பட்டாலும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஹரியானாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் பாஜக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, ஆட்சியமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.


முன்னதாக, கட்சி அலுவலகம் முன் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில், “மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மக்கள் பரிசளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜகவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த வெற்றி.

தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மனோகர் லால் கட்டாரும் முதல் முறையாக முதல்வர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கு அமைச்சர்களாக இருந்த அனுபவம் இருந்தது இல்லை. இருந்தாலும், 5 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக பணியாற்றி கொண்டிருக்கின்றனர்.

இதன் விளைவாக மக்கள் அவர்கள் மீது மீண்டும் தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளனர். ஐந்து ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிகழ்வு குறைவாகவே நடப்பதால், ஹரியானாவில் கிடைத்த வெற்றியும் மிகச்சிறப்பான வெற்றியே” என்று கூறினார்.
First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading