ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாட்டின் வளர்ச்சி மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடே குஜராத் தேர்தல் முடிவுகள்... பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

நாட்டின் வளர்ச்சி மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடே குஜராத் தேர்தல் முடிவுகள்... பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

குஜராத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ஈட்டித் தந்த வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் வளர்ச்சி மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக, குஜராத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக தொடர்ந்து 7-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. அத்துடன், குஜராத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகுதிகளை வென்று, அசுர பலம் பெற்றுள்ளது. இந்த வெற்றியை தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் கொண்டாடினர்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், பங்கேற்க வந்த பிரதமருக்கு, பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு புகார்.. துண்டால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற காங்கிரஸ் வேட்பாளர்!

பின்னர், ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டமன்றத் தேர்தலை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். குஜராத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ஈட்டித் தந்த வாக்காளர்களுக்கும் நன்றியை உரித்தாக்குவதாக குறிப்பிட்டார்.

அதே வேளையில், இமாச்சல பிரதேச வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார். நாட்டின் வளர்ச்சி மீது, பொதுமக்கள் வைத்துள்ள வலிமையான நம்பிக்கையின் வெளிப்பாடு என்ன என்பதை, குஜராத் தேர்தல் முடிவு நிரூபித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். நாட்டிற்கு சவால் வரும்போதெல்லாம், மக்கள் பாஜக மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

First published:

Tags: Gujarat Assembly Election, PM Modi