பிரிட்டனில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர
மோடி, 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கரியமில வாயு வெளியேற்றம் என்ற இலக்கை எட்டுவோம் என உறுதியளித்தார்.
பிரிட்டனின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு (UNFCCC) கடந்த 31ம் தேதி தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். COP26 climate summit நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கடுமையாக போராடி வருவதாகவும் இதன் பலன் விரைவில் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், காலநிலை மாற்றத்தில் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உலகம் இன்று ஒப்புக்கொள்கிறது. உங்கள் அனைவருக்கும் ஒரு வார்த்தை இயக்கத்தை நான் முன்மொழிகிறேன். LIFE என்பது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்று பொருள்படும். இன்று, நாம் அனைவரும் ஒன்றிணைந்து LIFE என்பதை ஒரு இயக்கமாக முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என தெரிவித்தார். உலகின் 17 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியா கரியமல வாயு வெளியேற்றத்தில் 5 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.
2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் அளவுக்கு புதைபடிம எரிபொருள் அல்லாத வழிகளில் மின்சார உற்பத்தி திறன் பெருக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர் இந்தியாவின் மின்சாரத் தேவையில் 50 சதவிகிதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்வோம் என்றும் குறிப்பிட்டார். இதேபோ, 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ஜ்யம் கரியமில வாயு மாசு என்ற இலங்கை இந்தியா எட்டும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: விளம்பர சர்ச்சை.. மங்கள்சூத்ரா விளம்பரத்தை திரும்ப பெற்றார் சப்யாசச்சி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.