படிக்கட்டில் தடுக்கி விழுந்த பிரதமர் மோடி...!

படிக்கட்டில் தடுக்கி விழுந்த பிரதமர் மோடி...!
News18
  • News18
  • Last Updated: December 14, 2019, 6:16 PM IST
  • Share this:
நமாமி கங்கா திட்ட கூட்டத்திற்காக உத்தரப்பிரதேசம் சென்றிருந்த பிரதமர் மோடி, படியேறும் போது தடுமாறி கீழே விழ முயன்றார்.

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் இன்று நடந்தது. கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கங்கை நதியை தூய்மைபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நமாமி கங்கா திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கங்கை நதியில் படகில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பின்னர், படியில் பிரதமர் மோடி ஏறும் போது கால் தடுக்கி கீழே விழ முயன்றார். அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமருக்கு உதவி செய்தனர். இதனால், சற்று பரபரப்பு ஏற்பட்டது.இதனை அடுத்து, பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டுச் சென்றார்.

Also Read...

நாளை முதல் FASTag...! யாரெல்லாம் சுங்கக் கட்டணம் செலுத்த தேவையில்லை...?

”மாமாவுக்கு ஓட்டு போடுங்க...” தேர்தல் பிரசாரத்தில் கலக்கிய பிரான்ஸ் மாணவி
 Also See...


 
First published: December 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading