ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் மாதம் 5 ஆயிரம் மொபைல் பில் கட்டியிருப்பீர்கள்: பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் மாதம் 5 ஆயிரம் மொபைல் பில் கட்டியிருப்பீர்கள்: பிரதமர் மோடி பேச்சு

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

குஜராத்தின் பரூச் மாவட்டத்தின் பழங்குடிப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் மக்களின் மொபைல் பில் மாதம் ரூ. 4,000 முதல் 5,000 வரை இருந்திருக்கும் என குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டபேரவை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தின் பழங்குடிப் பகுதியான நேத்ராங் மற்றும் கெடா ஆகிய இடங்களில் பிரதமர் உரையாற்றினார். இதில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

பயங்கரவாதம் முதல் உணவு தானியம் இலவசம் வரை பல்வேறு தலைப்புகளில் பேசினார்.

நாட்டில் பழங்குடியினர் மீது காங்கிரஸுக்கு மரியாதை இல்லை என்றும் எங்கள் பழங்குடியின மகளை திரௌபதி முர்முவை நாட்டின் ஜனாதிபதியாக்க முடிவு செய்தோம். அவரது வேட்புமனுவை ஆதரிப்பதற்காக நாங்கள் கூப்பிய கைகளுடன் காங்கிரஸ் கட்சியிடம் சென்றோம். ஆனால் அவர்கள் அதனை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தியதாகவும், நாட்டின் பழங்குடித் தலைவர்களுக்கு காங்கிரஸ் மரியாதை கொடுக்கவில்லை," என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: மின் இணைப்போடு பதிவு செய்த மொபைல் எண் தற்போது இல்லை என்றால் எப்படி ஆதாருடன் இணைப்பது? - முழு விவரம்

கொரோனா தொற்றிலிருந்து நாம் நாடு வெளி வந்த விதத்தை பார்த்து உலகமே வியப்படைந்தது என்றும், கடந்த 3 ஆண்டுகளாக 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கி இத்திட்டத்திற்காக ரூ.3 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது என கூறிய பிரதமர் மோடி பல நாடுகள் தடுப்பூசி செலுத்தவே போராடிக்கொண்டிருந்த வேலையில் நாம் 200 கோடி டோஸ்களுக்கு மேல் செலுத்தினோம் என்றார். டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என கூறிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், உங்கள் மொபைல் பில் மாதம் ரூ.4,000 முதல் 5,000 வரை இருந்திருக்கும் என கூறினார்.

குஜராத்தில் பயங்கரவாதிகளை பிடித்தோம். ஆனால் டெல்லியில் இருந்த காங்கிரஸ் அரசு ஓட்டு வங்கி அரசியலுக்காக பயங்கரவாதிகளை காப்பாற்றி வந்தது. பாட்லா ஹவுஸ் என்கவுன்டரின் போது, ​​பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் அழுதனர். தீவிரவாதம் கூட காங்கிரஸின் வாக்கு வங்கி என பிரதமர் மோடி கடுமையாக காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார்.

First published:

Tags: BJP, Congress, Gujarat, PM Modi