மன் கி பாத் நிகழ்ச்சியில் யூடியூபரை புகழ்ந்த பிரதமர் மோடி!

மன் கி பாத்தில் யூடியூபரை புகழ்ந்த பிரதமர் மோடி!

ஒருகட்டத்தில் தனது வீடியோக்களுக்கு வரவேற்பு அதிகரிக்கவே, அவரது வருமானமும் அதிகரித்துள்ளது. இதனால், தனது கடனை அடைத்த ஐசக், தற்போது சொந்தமாக வீடு ஒன்றையும் கட்டி, பொருளாதார நெருக்கடியில் இருந்த தனது குடும்பத்தை மீட்டுள்ளார்.

 • Share this:
  கடந்த வருடம் வரை தினக்கூலியாக வாழ்ந்து வந்த ஐசக் முண்டா தற்போது யூட்யூப் சேனல் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருகிறார். தன்னுடைய யூட்டியூப் சேனலில், எளிமையான கிராமத்து வாழ்க்கை, தான் உண்ணும் எளிய உணவுகள், ஓடிசாவின் பாரம்பரிய உணவுகளை சமைப்பது உள்ளிட்ட வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கடந்த ஆண்டு ஏற்பட்ட ஊரடங்கு பலரது வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலானோர் தாங்கள் வாழ்ந்து வந்த நிலையை வட பின்னுக்கு தள்ளப்பட்டு பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே இந்த ஊரடங்கு புதிய வாழ்க்கை தொடக்கத்தை அளித்துள்ளது.

  அந்த வகையில், ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஐசக் முண்டா வாழ்க்கையை இந்த ஊரடங்கு புரட்டிப்போட்டுள்ளது. தினக்கூலியாக வாழ்ந்து வந்த ஐசக், ஊரடங்கால் வேலையிழந்து தவித்து வந்துள்ளார். அப்போது, அவர் செல்போனில் யூடியூப் மூலம் பணம் சம்பதிக்கலாம் என்ற வீடியோ ஒன்றை பார்த்ததன் மூலம், தானும் வீடியோ பதிவு செய்து பார்க்க தொடங்கினார்.

  Also read: தேசிய பொறுப்பு; பல்வேறு மொழிகளைக் கற்று பேசி அசத்தும் வானதி சீனிவாசன்!

  இதற்காக அவர் பெரும் முதலீடு எதுவும் செய்யாமல், தனது கிராமத்து மக்களிடம் ரூ.3000 மட்டும் கடனாக வாங்கி செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த செல்போனை மட்டுமே அவரது மூலதனமாக கொண்டு தனது உழைப்பைத் தொடங்கியுள்ளார்.
  அந்த யூட்யூப் சேனலுக்கு ஐசக் முண்டா ஈட்டிங் என்று அதற்குப் பெயர் சூட்டினார். தொடர்ந்து, நிறைய வீடியோக்களை அதுவும் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்களைப் ஐசக் முண்டா தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வந்தார்.

  ஒருகட்டத்தில் தனது வீடியோக்களுக்கு வரவேற்பு அதிகரிக்கவே, அவரது வருமானமும் அதிகரித்துள்ளது. இதனால், தனது கடனை அடைத்த ஐசக், தற்போது சொந்தமாக வீடு ஒன்றையும் கட்டி, பொருளாதார நெருக்கடியில் இருந்த தனது குடும்பத்தை மீட்டுள்ளார்.

  Also read: பிரதமர் மோடி மக்களின் மனதை புரிந்திருந்தால்.. இப்படி நடந்திருக்காது; ராகுல் காந்தி

  இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் உரையில், ஐசக் முன்டாவை குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். அந்தவகையில், பிரதமர் மோடி பேசும் போது, தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளூர் தொழில்முனைவோருக்கு எப்படி உதவுகிறது என்பது குறித்து உரையாற்றிய அவர், ஓடிசாவை சேர்ந்த யூடியூபர் ஐசக் முண்டா, எப்படி கூலித்தொழிலாளியாக இருந்து யூட்யூபராக மாறி அதன் மூலம் தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை முன்னேற்றியுள்ளார் என்று உதாரணம் காட்டி பாராட்டியுள்ளார்.

  மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் தன்னை பாராட்டியதை அறிந்த ஐசக் முண்டா, பிரதமர் தனது பெயரை குறிப்பிட்டு பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது விடா முயற்சியை கைவிடாமல் தொடர்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: