முகப்பு /செய்தி /இந்தியா / வல்லபாய் படேல் உயிரோடு இருந்திருந்தால் கோவா முன்பே விடுதலையாகிருக்கும் - மோடி

வல்லபாய் படேல் உயிரோடு இருந்திருந்தால் கோவா முன்பே விடுதலையாகிருக்கும் - மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

கோவா போர்த்துக்கீசியர்கள் வசம் இருந்ததாகவும், 450 ஆண்டுகள் கடந்த பின்னரும் கோவா இந்தியாவை மறக்கவில்லை என்று மோடி பெருமிதம் தெரிவித்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :

கோவாவில் விடுதலை நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, 600 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். போர்த்துக் கீசியர்கள் ஆட்சியின் கீழ் 450 ஆண்டுகளாக கோவா இருந்தபோதும் இந்தியாவுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்படவில்லை என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

போர்த்துகீசியர் வசம் இருந்த கோவா விடுதலை பெற்றதன் 60-வது ஆண்டு கொண்டாட்டம் தலைநகர் பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆசாத் மைதானில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் விமான சாகசம், பாய்மர படகு நிகழ்ச்சி மற்றும் போர்க்கப்பல்களின் அணிவகுப்பையும் பிரதமர் பார்த்து ரசித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பி15 பி வகையைச் சேர்ந்த இரண்டாவது போர் கப்பலான மர்மகோவா இந்த அணிவகுப்பில் பங்கேற்றது.

Also Read: உங்கள் ஆன்லைன் வாழ்க்கைக்கு தரவுப் பாதுகாப்பு மசோதா எவ்வாறு உதவுகிறது?

அதைத்தொடர்ந்து ஷியாம் பிரசாத் முகர்ஜி மைதானத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, விடுதலை போரில் பங்கேற்ற தியாகிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.அதைத்தொடர்ந்து அகுவாடா கோட்டை சிறைச்சாலையில் புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகம், மொபா விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு மையம் உள்பட 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர், நாட்டின் பிற பகுதிகள் முகலாயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தபோது, கோவா மாநிலம் போர்த்துக்கீசியர்கள் வசம் இருந்ததாகவும், 450 ஆண்டுகள் கடந்த பின்னரும் கோவா இந்தியாவை மறக்கவில்லை என்றும் பெருமிதம் தெரிவித்தார். நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால், கோவா முன்கூட்டியே விடுதலை பெற்றிருக்கும் என்று அவர் கூறினார்.

தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தியது, திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்கியதற்காக கோவா அரசுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, அனைத்து துறைகளிலும் கோவா சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும் புகழாரம் சூட்டினார்.

Also Read:  பாதுகாப்பானது தாயின் கருவறையும் கல்லறையும் தான்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி தற்கொலை

தாம் இத்தாலி சென்றிருந்தபோது வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து இந்தியாவிற்கு வருமாறு அழைத்து விடுத்ததாகவும், இதனை கேட்ட போப் பிரான்சிஸ், தனக்கு தாங்கள் அளித்த மிகச் சிறந்த பரிசு இது என்று கூறியதாகவும் தெரிவித்தார். இது இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் ஜனநாயகத்தின் மீதான அவரது அன்பின் வெளிப்பாடு என்று பிரதமர் மோடி கூறினார்.

First published:

Tags: Goa, Modi, Narendra Modi, PM Modi