பாகிஸ்தானுக்கு உதவுபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா? பிரதமர் மோடி கேள்வி

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது எல்லாம், பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: April 3, 2019, 9:17 AM IST
பாகிஸ்தானுக்கு உதவுபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா? பிரதமர் மோடி கேள்வி
பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: April 3, 2019, 9:17 AM IST
ஏழைகளை வறுமையிலிருந்து விடுவிக்க எதிர்க்கட்சிகள் எதையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘பாகிஸ்தானுக்கு உதவுபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை மக்கள் முடிவுசெய்ய வேண்டும். ராணுவ நடவடிக்கைக்கு ஆதாரம் கேட்டு முப்படையினரை அவமானபடுத்துகின்றனர். எதிர்க்கட்சியினர் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர்கள் போல் பேசுகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது எல்லாம், பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம், விலைவாசி, வன்முறை, ஊழல், கறுப்பு பணம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. காங்கிரஸ் ஆட்சியில் முப்படையினரின் நற்பெயர், நேர்மை ஆகியவை மதிக்கப்படவில்லை. சொந்த குடும்பத்தினருக்கு பாரத் ரத்னா விருது வழங்கிய காங்கிரஸ், அம்பேத்கருக்கு வழங்கவில்லை.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீட்டை ஒழித்து விடும் என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்கின்றன. பொய் பிரசாரம் செய்யும் கட்சிகளுக்கு தேர்தல் மூலம் மக்கள் தண்டனை வழங்க வேண்டும்’’ என்று மோடி பேசினார்.

Also Read... EXCLUSIVE: மத்தியில் பாஜக அரசு மாறினால் தமிழக அரசு கலைந்துவிடும்: ப.சிதம்பரம்!  

வேலூரில் தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை  

ஃபேஸ்புக் பதிவால் பட்டதாரி அடித்துக்கொலை: அமமுக நிர்வாகி உள்பட 2 பேர் கைது   
Loading...
Also see ... தேர்தல் அறிக்கை மூலமாக தேசத்தை பிரிக்கிறாரா ராகுல்


நீட் தேர்வு ரத்து...! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் என்ன?தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...