நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் - பிரதமர் மோடி

நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: November 24, 2019, 8:10 AM IST
  • Share this:
காந்திய சிந்தனைகளை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு ஆளுநர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் இரண்டு நாள் மாநாடு, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. முதல் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர், நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முன்னேற்றமும் அவர்களுக்கான அதிகாரமளித்தலும், நமது உள்நாட்டுப் பாதுகாப்பு போன்று ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன், தங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இத்தகைய மக்களின் முன்னேற்றத்துக்காக சரியான வழிகாட்டுதலை வழங்கலாம் எனவும் கூறினார்.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளமாக விளங்கும் காந்திய சிந்தனைகள், போதனைகளை ஆளுநர்களும், துணை நிலை ஆளுநர்களும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
First published: November 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading