விதிகள் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கு: அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் உறுதியளித்த பிரதமர் மோடி

ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் பைடனின் முடிவையும் பிரதமர் மோடி வரவேற்றார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.

  • Share this:
    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்ததாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அதிபராகவும், இந்திய வம்சாவளி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் கடந்த மாதம் 20-ந் தேதி பதவியேற்றனர்.

    ஜோ பைடன் பதவியேற்றதும் அவருக்கும், கமலா ஹாரிசுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிலையில் ஜோ பைடன் உடன் தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். அவரது வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பிராந்திய பிரச்னைகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விவாதித்தோம். மேலும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க ஒப்புக்கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், “அதிபர் ஜோ பைடனுன் நானும் விதிகள் அடிப்படையிலான புதிய பன்னாட்டு ஒழுங்குக்காக பரஸ்பர உறுதியளித்துள்ளோம். மேலும் பொருளாதார-ராணுவ- ராஜிய உறவுகளைப் பலப்படுத்தவும் இருவரும் எதிர்நோக்குகிறோம். இந்தோ-பசிபிக் பகுதி மற்றும் அதைத் தாண்டியும் அமைதியையும் பாதுகாப்பதையும் உறுதி செய்வதற்காக அத்தகைய ராஜாங்க உறவுகளை எதிர்நோக்குகிறோம், என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

    பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, பிரதமர் மோடி பைடனுக்கு வாழ்த்துக்கள் கூறியதாகவும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தப் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருவரும் புவி அரசியல் நிலவரங்களையும், பிராந்திய அரசியல் நிலைகளையும் நீண்ட நேரம் விவாதித்தனர் என்கிறது பிரதமர் அலுவலகச் செய்திக்குறிப்பு.

    மனமொத்த நாடுகளின் மூலம் விதிகளுக்குட்பட்ட ஒரு பன்னாட்டு ஒழுங்கை ஏற்படுத்த இருவரும் செயல்படவிருப்பதாகவும் கூறுகிறது. அதே போல் பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளையும் இருவரும் விவாதித்துள்ளனர்.

    பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் பைடனின் முடிவையும் பிரதமர் மோடி வரவேற்றார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.
    Published by:Muthukumar
    First published: