• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Exclusive | எதிரணியினரை வீழ்த்த பாஜகவின் வியூகம் என்ன? - பிரதமர் மோடியுடன் சிறப்பு நேர்காணல்

Exclusive | எதிரணியினரை வீழ்த்த பாஜகவின் வியூகம் என்ன? - பிரதமர் மோடியுடன் சிறப்பு நேர்காணல்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான் - இந்தியா உறவு, 2019 தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று பலவிதமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி விரிவான, தெளிவான பதிலை அளிக்க உள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிற இருக்கின்றன. மே 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அன்றைய தினம், நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார்? என்ற மிகப்பெரும் கேள்விக்கு விடை கிடைக்கும். ஆளும் பாஜக 2014-ல் பெற்ற வெற்றியைப் போல, மீண்டும் ஒரு வெற்றியை சுவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தீவிரமாக உழைத்து வருகிறது.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் என்று டாப் தலைவர்கள் முதல் லோக்கல் தலைவர்கள் வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள பாஜக தேர்தல் அறிக்கையும் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர்.

இந்நிலையில், 5 ஆண்டுகளில் தனது அரசு செய்தது என்ன? வரப்போகும் தேர்தலில் இருக்கும் சவால்கள் என்ன? ஒன்றுபட்டு நிற்கும் எதிரணியினரை வீழ்த்த வைத்துள்ள வியூகம் என்ன? ஆகிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார்.

காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தான் - இந்தியா உறவு, 2019 தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று பலவிதமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி விரிவான, தெளிவான பதிலை அளிக்க உள்ளார்.

நெட்வொர்க் 18 குழும தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷி பிரதமர் மோடியிடம் எடுத்த நேர்காணல் நாளை இரவு 7 மணிக்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் News18Tamil.com இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.



 






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: