இமாச்சல பிரதேசதிற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - பிரதமர் உறுதி

இமாச்சல பிரதேசதிற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - பிரதமர் உறுதி
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: September 27, 2018, 9:02 AM IST
  • Share this:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு அனைத்து வகையான உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை அந்நாட்டு கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் மட்டுமே 898 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர்  ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.

மேலும் மீட்கப்பட்டவர்களில் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை, ராஜஸ்தான் பகுதியில் வரும் 29-ம் தேதி நிறைவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கேரளாவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி தொடங்கிய தென்மேற்குப் பருவமழையை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் மழை குறையும் என்றும், அதனைத்தொடர்ந்து மற்ற மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல பஞ்சாப் மாநிலத்திற்கும் பிரதமர் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.First published: September 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading