#ModiSpeaksToNews18 : தேசியவாதம் குறித்து பிரதமர் மோடி விளக்கம்

பாரத் மாதா கி ஜேவில் உள்ள ஜே, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமானது. மக்கள் தங்கள் வாழ்வை முன்னேற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளை நான் வழங்கினால், அதுவே எனது பார்வையில் தேசியவாதம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்

#ModiSpeaksToNews18 : தேசியவாதம் குறித்து பிரதமர் மோடி விளக்கம்
மோடி
  • News18
  • Last Updated: April 10, 2019, 11:35 AM IST
  • Share this:
தேசியவாதம் என்பது பாரத் மாதா கீ ஜே. நான் பாரத் மாதா கி ஜே என சொல்லும் போது என் தாய் நாடு துயருற்று இருந்தால், அது எனது தேசியத்துக்கான நீதியாகுமா? என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டியில், புல்வாமா தாக்குதல், மக்களவை தேர்தல், காஷ்மீர் பிரச்னை, ரஃபேல் விவகாரம், தேசியவாதம், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், நம்பி நாராயணன், சக்ஜுதா எக்ஸ்பிரஸ், ரெயில் குண்டு வெடிப்பு ஆகிய பல விவகாரங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

தேசியவாதம் என்பது பாரத் மாதா கீ ஜே. நான் பாரத் மாதா கி ஜே என சொல்லும் போது என் தாய் நாடு துயருற்று இருந்தால், அது எனது தேசியத்துக்கான நீதியாகுமா? தூய்மை இந்தியாவை நான் கொடுக்க விரும்புவது தேசியவாதம் இல்லையா? ஏழைகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என விரும்புவது தேசியவாதம் இல்லையா? ஏழைகள் மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி உயிரிழப்பது தான் தேசியவாதமா? தேசியவாதம் என்றால் என்ன? ஏழையை உயிரிழக்க அனுமதிப்பதா அல்லது அவர்களை காக்க ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் வழங்குவதா? அது தேசியவாதம் இல்லையா? நவீன உத்திகளை பயன்படுத்தி விவசாயி தனது பொருளுக்கான முழு விலையை பெறுவது. அவர்களால் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட ஒன்றரை மடங்கு கூடுதல் விலை பெறுவது தேசியவாதம் இல்லையா? தேசியவாதம் என்பதன் பொருள் மாறுதலுக்குரியது. பாரத் மாதா கி ஜேவில் உள்ள ஜே, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமானது. மக்கள் தங்கள் வாழ்வை முன்னேற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகளை நான் வழங்கினால், அதுவே எனது பார்வையில் தேசியவாதம். தேசியவாதத்துக்கு அதுவே பொருளென்றால் நாம் தேசியவாதிகள். நமது தேசியவாதம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கக் கூடியது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.


தேசியவாதம் தவிர்த்து உள்ள பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது,  முதல் பிரச்னை வளர்ச்சி. இது இரண்டு விதமனாது. ஒன்று சமூக உள்கட்டமைப்பு மற்றொன்று கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வது. இந்தியாவில் ஏராளமான மக்கள் இப்போதும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உள்ளனர். வீடில்லாதவர்களுக்கு நாங்கள் வீடு வழங்க உள்ளோம். ஏழைகளுக்கு மருத்துவ வசதிகள், கல்வி வழங்க உள்ளோம். அனைத்து குடிமக்களும் கவுரவத்துடன் வாழ்வதற்கான நிலையை உறுதிப்படுத்துவோம். வாழ்வதற்கான சூழலை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுப்போம். இந்தியாவின் மிகப்பெரிய பலம் புதிய நடுத்தர வர்க்கம். இந்த பிரிவை முந்தைய அரசுகள் புறக்கணித்துள்ளன. நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதில் நடுத்தர வர்க்கம் பெரும்பங்காற்றும். நடுத்தர வர்க்கம் சட்டத்தை மதிக்கிறது. சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுகிற பிரிவாக நடுத்தர வர்க்கம் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினரே வரியை முறையாக செலுத்துகின்றனர். அரசிடம் இருந்து மிகக்குறைவாக எதிர்பார்க்கிற பிரிவாக நடுத்தர வர்க்கம் உள்ளது. அவர்களை தாக்குதல்களில் இருந்து காக்க வேண்டியது அரசின் கடமை. காங்கிரஸ் கட்சி அவர்களை இழிவுபடுத்துகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தெரிவிக்கும் கருத்துகள் ஏற்க முடியாதது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருவாயை இரட்டிப்பாக்கவும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும் நடவடிக்கை எடுப்போம். ஓய்வூதியம் கொடுப்பதால் அவர்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்று பொருளில்லை. ஒரு ஆசிரியர் ஓய்வு பெறும் போது, அவர் ஓய்வூதியம் பெற்றாலும், டியூஷன் போன்றவற்றின் மூலம் தொடர்ந்து செயல்படுகிறார். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவே ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். சிறுவணிகர்ளுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். ரூ. 100 லட்சம் கோடி முதலிடு இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் என நம்புகிறோம். மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும். இதுவே எங்கள் உறுதிமொழி பத்திரத்தில் உள்ள எங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்கள். எங்கள் தேர்தல் அறிக்கை மிகச்சிறப்பாக வடிவடைக்கப்பட்டதாகும். 5 ஆண்டுகள் இருந்த ஆட்சியில் இருந்த சக்திவாய்ந்த அரசு இந்த உறுதிமொழி பத்திரத்தை உருவாக்கியுள்ளது. நாங்கள் உறுதியளித்துள்ளதை அடுத்த 5 ஆண்டுகளில் எங்களால் மட்டுமே வழங்க முடியும். நாங்கள் அடுத்த 24 மணி நேர தலைப்பு செய்திகளுக்காக எங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. எங்கள் தேர்தல் அறிக்கை வரும் 2024-ம் ஆண்டு வரைக்குமானது. சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Also watch
First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading