பிரதமர் மோடி கொடுத்த காசு தரமுடியாது.. அடம்பிடிக்கும் இளைஞர்.. விழிபிதுங்கும் வங்கி ஊழியர்கள்

மாதிரிப்படம்

பிரதமர் மோடி கொடுத்த காசு தரமுடியாது என வங்கி ஊழியர்களிடம் இளைஞர் ஒரு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 • Share this:
  வங்கி கணக்கில் தவறுதலாக வந்த 5 லட்சத்தை செலவு செய்த இளைஞர் அதனை திருப்பித்தராமல் பிரதமர் மோடி கொடுத்த பணம் தரமாட்டேன் எனக் கூறி வங்கி ஊழியர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

  பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவரது வங்கி கணக்கில் வங்கி ஊழியர்களின் தவறால் சுமார் 5.5 லட்சம் டெபாசிட்  செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்குக்கு பணம் வந்த மகிழ்ச்சியில் கவுண்டமணி காமெடியில் வருவது போல் இந்த ரோடு என்ன விலை.. இந்த வீடு என்ன விலை.. ஐயோ இப்ப நான் எதையாவது வாங்கனுமே என்கிற ரீதியில் இஷ்டத்துக்கு பணத்தை செலவு செய்துவிட்டார்.  தன் கணக்கு பணம் வந்தது குறித்து வங்கிக்கும் இவர் தெரியப்படுத்தவில்லை. இந்நிலையில் பணத்தை வேறொருவர் கணக்கில் தவறாக வரவு வைத்துவிட்டோம் என உணர்ந்த வங்கி ஊழியர்கள் ரஞ்சித் தாஸ் அக்கவுண்டில் பணம் டெபாசிட் ஆனதை உறுதி செய்தனர்.

  Also Read:  வட இந்தியாவில் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் பாதிப்பு..

  ரஞ்சித் தாஸ் அக்கவுண்டை சோதனை செய்து பார்த்தால் அதில் மினிமம் பேலன்ஸை தவிர ஒரு பைசா இல்லை. அந்த இளைஞரை தொடர்புக்கொண்டு உங்கள் கணக்கில் 5.5 லட்சத்தை தவறாக வரவு வைத்துவிட்டோம் பணத்தை திருப்பித்தாருங்கள் எனக் கேட்டுள்ளனர். அந்த இளைஞர் கூறிய பதிலை கேட்டு வங்கி ஊழியர்கள் ஷாக்காகி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி எல்லா மக்களின் வங்கி கணக்கிலும்15 லட்சம் போடுறேன்னு வாக்குறுதி குடுத்தார். அதில் முதல் தவணையாக 5.5 லட்சம் என்னுடைய அக்கவுண்டில் போட்டிருக்கார். நான் பணத்தை செலவு செய்துவிட்டேன் திருப்பித் தரமுடியாது எனக் கூறீயுள்ளார்.

  வங்கி ஊழியர்கள் நடந்த தவற்றை எடுத்துக்கூறியுள்ளனர். பிரதமர் உங்கள் கணக்கில் பணம் போடவில்லை நாங்கள் செய்த பிழையால் இந்த தொகை வந்துவிட்டது எனக் கூறீயுள்ளார்.ஆனால் அந்த இளைஞர் பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டேன் திருப்பி கொடுக்க என்னிடம் பணம் இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து வேறுவழியில்லாமல் காவல்துறையை நாடியுள்ளனர் வங்கி அதிகாரிகள்.

  Also Read: பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறை ஆய்வு

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், “இந்த வருடம் மார்ச் மாதம் என்னுடைய அக்கவுண்டுக்கு பணம் வந்தது நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். பிரதமர் மோடி 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துகிறேன்னு கூறியிருந்தாரே அதில் முதல் தவணையாக 5.5 லட்சத்தை அளித்ததாக நினைத்தேன்.  எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டேன். என்னுடைய வங்கி கணக்கில் ஒரு பைசா இல்லை எனக் கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: