கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி வாகன பேரணியில் கலந்து கொண்டபோது, இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வலையங்களை மீறி மாலையுடன் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, பிரமாண்ட வாகனப் பேரணியில் கலந்துகொண்டார். கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் 26வது தேசிய இளைஞர் திருவிழா தொடங்குகிறது. இதற்காக ஹூப்ளி வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சாலையின் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். காரில் இருந்து தொங்கியபடி மக்களை பார்த்து நீண்ட தூரம் பிரதமர் மோடி கையசைத்து வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென பாதுகாப்பு தடுப்புகளை மீறி பிரதமர் மோடியை நோக்கி ஓடி வந்தார். அவர் கையில் இருந்த மாலையை பிரதமருக்கு சூட்ட முற்பட்டார். அருகில் இருந்த பிரதமரின் மெய்காப்பாளர்கள் அவரை தடுத்து இழுத்த போது அவர்களை மீறி செல்ல முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
#WATCH | Karnataka: A young man breaches security cover of PM Modi to give him a garland, pulled away by security personnel, during his roadshow in Hubballi.
(Source: DD) pic.twitter.com/NRK22vn23S
— ANI (@ANI) January 12, 2023
அவர் கையில் இருந்த மாலையை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார். அவரை காவலர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Karnataka, PM Modi, Security guards