மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன் - பிரதமர் மோடி

"ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதில் எந்த தவறும் இல்லை" என்று மோடி கூறினார்.

Web Desk | news18
Updated: April 20, 2019, 8:02 AM IST
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானமில்லா கடன் - பிரதமர் மோடி
மோடி
Web Desk | news18
Updated: April 20, 2019, 8:02 AM IST
மத்தியில் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வர்த்தகர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை அடமானமில்லா கடன் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். சிறு கடைகளை நடத்துவோருக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார். 

அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பில் தேசிய வணிகர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பணவீக்கத்திற்கு வணிகர்களே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியதாகவும், வணிகர்களை திருடர்கள் என்று கூறி காங்கிரஸ் அரசு ஒதுக்கி வைத்திருந்ததாகவும் விமர்சித்தார்.

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வணிகர்கள் விளங்குவதாகக் கூறிய மோடி, வணிகர்களுக்கு கடந்த காலங்களில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என தெரிவித்தார். ஆனால், தமது 5 ஆண்டு கால ஆட்சியில் வணிகர்கள் வாழ்வாதாரம் சிறப்பாக இருப்பதாக குறிப்பிட்டார்.தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், வர்த்தகத்தை மேம்படுத்த நாள்தோறும் ஒரு சட்டம் என்ற முறையில், 1,500 தேவையற்ற சட்டங்களை நீக்கியுள்ளதாக குறிப்பிட்ட மோடி, எதிர்க்கட்சிகள் தேவைப்படும்போது மட்டுமே வணிகர்களைப் பற்றி சிந்திப்பதாகவும் விமர்சித்தார். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வர்த்தகர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை அடமானமில்லா கடன் வழங்கப்படும் என்றும், பதிவு செய்த வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பேரிடர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கிரெடிட் கார்டு மற்றும் சிறு வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் போன்ற திட்டங்களை செயல்படுத்த நல வாரியம் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடி, அது அரசுக்கும் வணிகர்களுக்கும் இடையே ஒரு இணைப்பாக இருக்கும் என குறிப்பிட்டார்.

ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்தியதில், எந்த தவறையும் செய்யவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி, இதன்மூலம் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதாக கூறினார்.

மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக உலக அளவில் வர்த்தகத்திற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தில் இருப்பதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் 50 இடங்களுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே இலக்கு என்றும் தெரிவித்தார்.

Also see...  ரஜினியின் முடிவுக்கு தி இந்து குழும தலைவர் வரவேற்பு!


Also see... 50-க்கும் மேற்பட்டோரை துரத்தி துரத்தி கடித்த வெறிநாய்! சேலத்தில் பரப்பரப்பு


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...