ஹோம் /நியூஸ் /இந்தியா /

150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை - பிரதமர் பெருமிதம்!

150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை - பிரதமர் பெருமிதம்!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்த விஞ்ஞானிகள், தடுப்பூசி தயாரிப்பாளர்கள், சுகாதாரப் பணியாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் அயராத உழைப்பே காரணம் என்றும் மோடி தெரிவித்தார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நாடு முழுவதும் 150 கோடி டோஸ் கொரோன தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது பெருமிதம் அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சுகாதாரப் பணியாளர்களின் அயராத உழைப்பால் சாத்தியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

  கொல்கட்டாவில் 534 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவமனையின் இரண்டாவது வளாகத்தை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

  நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 150 கோடியை கடந்துள்ளதாகவும், இந்த மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்த விஞ்ஞானிகள், தடுப்பூசி தயாரிப்பாளர்கள், சுகாதாரப் பணியாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் அயராத உழைப்பே காரணம் என்றும் தெரிவித்தார்.

  Also read... பூஸ்டர் தடுப்பூசி: மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் முக்கிய அறிவிப்பு

  Also read... இத்தாலியில் இருந்து ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று

  Also read... வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் புதிய விதிமுறையை ஏற்படுத்திய மத்திய அரசு

  இந்தியாவில் தகுதி உடைய 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், ஐந்தே நாட்களில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டார்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Corona Vaccine, PM Narendra Modi