தடுப்பூசி எனும் ஒரே ஆயுதத்தால் கொரோனாவை வீழ்த்துவோம்; பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி உரை

அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கு கொண்டு சென்றுள்ளோம். மக்களை காப்பாறுவதற்காக நாட்டின் முப்படைகளையும் பயன்படுத்தினோம்

 • Share this:
  கொரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். தடுப்பூசி எனும் ஒரே ஆயுதத்தால் கொரோனாவை வீழ்த்துவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் சமயத்தில் நாட்டு மக்களிடம் பல முறை பிரதமர் மோடி உரையாற்றினார். மக்களுக்கு ஆலோசனை வழங்கினார். நிலைமையை சமாளிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மேற்கோள் காட்டினார்.

  தொடர்ந்து, கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக நாடே பேரழிவுக்கு உள்ளானது. தற்போது படிப்படியாக தொற்று பரவல் குறைந்து, பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதில், உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது. மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்சிஜன் தேவை நாட்டில் ஏற்பட்டது. அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கு கொண்டு சென்றுள்ளோம். மக்களை காப்பாறுவதற்காக நாட்டின் முப்படைகளையும் பயன்படுத்தினோம்.

  கொரோனாவுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன்களத்தில் நின்று போராடி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தேவையான மருந்துகள் அனைத்தையும் கொண்டு வந்துள்ளோம். தடுப்பூசி எனும் ஒரே ஆயுதத்தால் கொரோனாவை வீழ்த்துவோம்.

  கொரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். தடுப்பூசியை இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். எப்போதும் கிடைக்கும் வகையில் தடுப்பூசி உற்பத்தி நிரந்திரமாக இருக்கும் என்று கூறினார்.

  மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் ஜூன் 21 முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்யப்படும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று முற்றிலும் இலவசமாக தடுப்பூசிக்கள் வழங்கப்படும். கொரோனா தடுப்பூசிக்காக மாநில அரசுகள் இனி செலவழிக்கத் தேவையில்லை.

  தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25 சதவீத பங்கையும் மத்திய அரசே ஏற்கும். மாநில அரசுகளுக்கான கொரோனா தடுப்பூசி கொள்கையை ஏற்கனவே வகுத்துள்ளோம். தடுப்பூசிக்காக, எந்த மாநில அரசும் எதுவும் செலவழிக்க வேண்டாம். நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: