'நல்லா தூங்குனீங்களா மோடி..?’- ஒபாமாவுடன் ’தட் நண்பேண்டா மொமென்ட்’!

மோடி- ஒபாமா. ( REUTERS)

முதன்முதலாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கடந்த 2014-ம் ஆண்டின் போது பிரதமர் மோடி நேரில் சந்தித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
’ஒபாமாவை எப்போது சந்தித்தாலும் என் தூக்கம் குறித்துத்தான் விசாரிப்பார்’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நடிகர் அக்‌ஷய் குமார் உடனான நேர்காணலில் பிரதமர் மோடி பங்கெடுத்தார். அப்போது முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உடனான தனது நட்பு குறித்துப் பகிர்ந்துகொண்டார் பிரதமர் மோடி. எப்போது ஒபாமாவை சந்தித்தாலும் அவர் தனது தூக்கம் குறித்தே விசாரிப்பார் என்கிறார் மோடி.

மேலும் அவர் கூறுகையில், “நான் ஒபாமாவை சந்தித்தபோது என்னுடைய தூக்க முறை குறித்தே அவர் விசாரிப்பார். ஏன் இவ்வளவு குறைவான நேரம் மட்டும் உறங்குகிறீர்கள் என கடிந்துகொள்வார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? உங்களுக்கு இப்போது தெரியாது.

நீங்கள் வேலை செய்வதற்கு அடிமையாகிவிட்டீர்கள். இது உங்களை நீங்களே துன்புறுத்திக்கொள்வது போன்றதாகும்” என நட்புடன் கடிந்துகொள்வார்.

முதன்முதலாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கடந்த 2014-ம் ஆண்டின் போது பிரதமர் மோடி நேரில் சந்தித்துள்ளார். அன்றிலிருந்து இன்று வரையில் இந்த நட்பு வளர்ந்து வருவதாகவே கூறுகிறார் மோடி.

இந்திய ஊடகங்களில் மட்டுமல்லாது இந்த நட்பு குறித்து அமெரிக்க ஊடகங்களான நியூயார்க் டைம்ஸ் சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நட்பு குறித்து கடந்த 2017-ம் ஆண்டு ஒபாமாவே பேசியுள்ளார். அன்று, “மோடிக்கு எப்போதும் ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்கும். எனக்கு அது பிடிக்கும். மோடி மட்டுமல்ல மன்மோகன் சிங் கூட என் நெருங்கிய நண்பர்தான்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: தாக்குதலுக்கு முன் சபதமேற்ற பயங்கரவாதிகள் : வீடியோ காட்சிகளை வெளியிட்டது ஐ.எஸ்.
Published by:Rahini M
First published: