திசை மாறிச் சென்ற பொருளாதாரத்தை சீர்படுத்தினோம் - பிரதமர் மோடி

அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதால், வங்கித்துறையினரும் தொழில்துறையினரும் தயக்கமின்றி முதலீடுகள் மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

திசை மாறிச் சென்ற பொருளாதாரத்தை சீர்படுத்தினோம் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: December 20, 2019, 4:37 PM IST
  • Share this:
தற்போது நிலவும் பொருளாதார சூழலில் இருந்து நாடு விரைவில் வலுவாக மீண்டு எழும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

திசை மாறி பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை பாஜக அரசு ஒழுங்குபடுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான அசோசெம்மின் நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் சீரான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், பல ஆண்டுகளாக தொழில் நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கையை பாஜக அரசு நிறைவேற்றியதாகவும், கூறினார்.


மேலும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கு எளிதில் எட்டக்கூடியதே என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தேவையற்ற விசாரணைகளில்லாத வரி நிர்வாக முறைக்கு மாறிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்திய பொருளாதாரம் கடந்த காலங்களிலும் மந்தநிலையை சந்தித்துள்ளன என சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தற்போது நிலவும் சூழலில் இருந்து வலுவாக மீண்டெழும் என்றும் கூறினார்.

அரசு போதுமான நடவடிக்கைகள் எடுத்திருப்பதால், வங்கித்துறையினரும் தொழில்துறையினரும் தயக்கமின்றி முதலீடுகள் மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.Also see...
First published: December 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்