“தவறான கொள்கைகளால் நாட்டை காங்கிரஸ் சீரழித்துவிட்டது“ பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குருநானக் பிறந்த இடமான கர்தார்பூருக்கு பக்தர்கள் செல்வதற்கான வழித்தடம், காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“தவறான கொள்கைகளால் நாட்டை காங்கிரஸ் சீரழித்துவிட்டது“ பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மோடி
  • Share this:
காங்கிரஸ் கட்சி தனது தவறான கொள்கைகளால் நாட்டை சீரழித்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கான பரப்புரை மாலையுடன் நிறைவடைந்தது, மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தான் போட்டியிடும் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். தொண்டர்கள் புடைசூழ வீதிவீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

ஹரியானா மாநில தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மாநிலத்தை புறக்கணித்ததாக குற்றம்சாட்டினார். இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் எப்போதும் மதித்ததில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.


குருநானக் பிறந்த இடமான கர்தார்பூருக்கு பக்தர்கள் செல்வதற்கான வழித்தடம், காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தவறான கொள்கைகளால் காங்கிரஸ் கட்சி நாட்டையே சீரழித்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். காஷ்மீரின் சீரழிவுக்கும் காங்கிரஸ் கட்சியே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

ஹரியானாவில் நடிகை ஹேமமாலினி, நடிகர் சன்னி தியோல் உள்ளிட்டோர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மகாராஷ்ட்ராவில், பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார். இதனிடையே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஏழைகளின் பிரச்னைகளை உணர்ந்திருப்பதாகவும், அதனாலேயே நாட்டில் உள்ள 10 கோடி மக்களுக்கு கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.நாட்டில் அதிக எண்ணிக்கையில் பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களை கொண்ட கட்சி பாஜக மட்டுமே என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். பழங்குடியின மக்களுக்கு காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை வழங்கியதை தவிர வேறு எதையும் செய்யவில்லை என்றும் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

Also Watch : 7 பேரை விடுவிக்க ஆளுநர் மறுப்பா?

First published: October 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்