ஆந்திராவிலும், தமிழகத்திலும் பாஜக கொடி உயரப்பறக்கும் - பிரதமர் மோடி

மோடி - ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரா மற்றும் தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டாலும், மற்ற மாநிலங்களைப் போல் இந்த மாநில மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை மத்திய அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் மற்றும் ஆந்திராவில் பாஜக வெற்றி பெறாவிட்டாலும் அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவதே மத்திய அரசின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் திருப்பதி வந்த பிரதமரை ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய மோடி எதிர்வரும் 5 வருடங்களில் நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் 131 கோடி இந்தியர்களின் இதயங்களை வெல்வோம் என்றார். மேலும், ஆந்திரா மற்றும் தமிழக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்காவிட்டாலும், மற்ற மாநிலங்களைப் போல் இந்த மாநில மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும், விரைவில் ஆந்திராவிலும் தமிழகத்திலும் பாஜகவின் கொடி உயரப் பறக்கும் என்றும் கூறினார்.

இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் பாஜக கொடி பறக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை, ஆந்திராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை குறிப்பிட்டதற்கு மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்கு உங்கள் பேச்சு பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது என்றும் கூறியள்ளார்

Also see... ரூ.60-க்கு தங்கத்தில் உலகக் கோப்பை செய்து அசத்திய தமிழர்

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: