’உலகத்துக்கு ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் கற்றுக்கொடுத்துள்ளது’ - பிரதமர் மோடி..

’உலகத்துக்கு ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் கற்றுக்கொடுத்துள்ளது’ - பிரதமர் மோடி..

பிரதமர் மோடி

பீகாரில் ஒவ்வொரு குடிமகனின் ஒவ்வொரு பகுதியின் சமச்சீரான வளர்ச்சியையும் உறுதி செய்கிறேன். இன்னும் முழுமையான அர்ப்பணிப்புடன் நாங்கள் உங்களுக்காகப் பணியாற்றுவோம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

 • Share this:
  பீகார் தேர்தலில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. நிதிஷ் குமார் 7-வது முறையாக முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். 


  நிதிஷ் குமாரின் ஜேடியு-வுக்கு தனிப்பட்ட முறையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தில் அவர் மீண்டும் ஆட்சியமைக்கிறார். இந்நிலையில் பீகார் வெற்றியை குறித்து பிரதமர் மோடி தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது..
  உலகிற்கு ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் மக்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஜனநாயகம் எப்படி வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பீகார் உலகுக்கு உணர்த்தியுள்ளது.  நிறைய ஏழைகள், ஒன்றுமற்றவர்கள், பெண்கள் ஆகியோர் வாக்களித்து வளர்ச்சிக்கான தீர்மானமான தீர்ப்பை அளித்துள்ளார்கள். கிராமங்களில் உள்ள ஏழைகள், வியாபாரிகள், கடைக்காரர்கள் என்று சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மந்திரமான சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ் என்ற அனைவருக்குமான அனைவருடனுமான வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளனர்.

  பீகாரில் ஒவ்வொரு குடிமகனின் ஒவ்வொரு பகுதியின் சமச்சீரான வளர்ச்சியையும் உறுதி செய்கிறேன். இன்னும் முழுமையான அர்ப்பணிப்புடன் நாங்கள் உங்களுக்காகப் பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Gunavathy
  First published: