முகப்பு /செய்தி /இந்தியா / காசி தமிழ் சங்கமம் ஒரு தனித்துவமான நிகழ்வு... பிரதமர் மோடி புகழாரம்!

காசி தமிழ் சங்கமம் ஒரு தனித்துவமான நிகழ்வு... பிரதமர் மோடி புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

காசிக்கும், தமிழகத்துக்கும் உள்ள தொடர்பை பறைசாற்றும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

ஒரே பாரதம் உன்னத பாரதம் என்கிற உணர்வை கொண்டாடும் தனித்துவ நிகழ்வு என்று காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆன்மிக தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் உள்ளவர்களிடம் ஆன்மிகத் தலங்கள் குறித்து கேட்டால், காசி ராமேஸ்வரம் என்றுதான் வரிசைப்படுத்த தொடங்குவர். அந்தளவுக்கு தமிழர்களின் நம்பிக்கையில் ஊறி திளைத்திருக்கும் காசிக்கும், தமிழகத்துக்கும் உள்ள தொடர்பை பறைசாற்றும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர ஆண்டை, அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வரும் மத்திய அரசின் சார்பில், பனாரஸ் பல்கலைக்கழகமும் ;சென்னை ஐஐடியும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கலை, இலக்கியம், ஆன்மிகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து முதல் குழு சென்ற சிறப்பு ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்வில், காளியாட்டம், கை சிலம்பம், பம்பை, சேர்வையாட்டம், பரதநாட்டியம் என வீரத்தையும் கலையையும் பிரதிபலிக்கும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி குறித்து தமிழில் ட்வீட் செய்துள்ள உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான். 'காசி தமிழ் சங்கமம்' ஆனது இந்த 'ஒன்றுபட்ட நிலையின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம் என தெரிவித்துள்ளார்.

இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, “ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை கொண்டாடும் தனித்துவ நிகழ்வு” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கூகுளையே மிரள வைக்கும் ரெஸ்யூம் இது தான்! - வைரலாகும் லிங்கிடு இன் போஸ்ட்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்களின் பயணச் செலவு, தங்குமிடம் அனைத்தையும் மத்திய அரசு செலுத்தும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்று நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: PM Modi, Tweet, Varanasi, Yogi adityanath