Home /News /national /

தன்னை உயிருடன் அனுப்பி வைத்த பஞ்சாப் முதல்வருக்கு பிரதமர் மோடி நன்றி கூறியதாக தகவல்

தன்னை உயிருடன் அனுப்பி வைத்த பஞ்சாப் முதல்வருக்கு பிரதமர் மோடி நன்றி கூறியதாக தகவல்

பிரதமர் மோடிக்கு நேர்ந்ததைப் போன்று எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு நேர்ந்ததைப் போன்று எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு நேர்ந்ததைப் போன்று எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

    தன்னை உயிருடன் திருப்பி அனுப்பி வைத்ததற்கு பஞ்சாப் முதல்வரிடம் பிரதமர் மோடி நன்றி கூறியதாக தகவல் பரவி வருகிறது. பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளிடம் இந்த தகவலை கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

    பஞ்சாப் மாநிலத்தில் சில நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை அங்கு சென்றார். முதலில் பதிண்டாவுக்கு வந்த மோடி, அங்கிருந்து தேசிய தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள ஹுசைனிவாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

    இதையும் படிங்க : 'பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி' - பஞ்சாப் அரசு மீது உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு

    அப்போது, வெளிச்சம் குறைவு, தொடர் மழை காரணமாக, சாலைப் பயணத்தை தவிர்த்து ஹெலிகாப்டரில் மோடி செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. வானிலை சரியாக அமையாத காரணத்தால் சாலை மார்க்கமாக மோடி செல்வதற்கு பயணத்திட்டம் மாற்றப்பட்டது. அதற்கு முன்பாக, பஞ்சாப் டிஜிபியிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பிரதமர் மோடி செல்லக் கூடிய வழியில் மிகச்சரியாக உள்ளதென உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க : சனி, ஞாயிறுகளில் பேருந்து போக்குவரத்து ரத்து - கொரோனா பரவலால் பெங்களூருவில் கடும் கட்டுப்பாடு

    இந்நிலையில் மோடி செல்லும் வழியில், விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சாலைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாக பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் இருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், எந்தவொரு இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் இந்த அளவுக்கு குறைபாடு ஏற்பட்டதில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

    நடந்த சம்பவம் குறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அளித்துள்ள விளக்கத்தில் ,'பிரதமர் மோடியின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதும் ஏற்படவில்லை. அவர் முதலில் ஹெலிகாப்டரில்தான் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் எங்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் பயணம் சாலை மார்க்கத்திற்கு மாறி விட்டது. நான் போராட்டக்காரர்களுடன் பேசி 3 மணிக்குள்ளாக கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டேன்.' என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க : வேகமெடுக்கும் 3வது அலை: மருத்துவமனைகளை தயார்படுத்துங்கள்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

    இந்நிலையில் பஞ்சாபில் இருந்து திரும்பியபோது பதிண்டா விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமா மோடி பேசியுள்ளார். அப்போது, தன்னை உயிருடன் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்ததற்காக உங்கள் (பஞ்சாப்)முதல்வருக்கு நன்றி என்று கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: PM Modi

    அடுத்த செய்தி