மலைப் பகுதிகள், சந்தைகளில் முகக்கவசம் அணியாமல் கூட்டம் கூடுவது கவலைக்குரியது - பிரதமர் மோடி வருத்தம்

பிரதமர் நரேந்திர மோடி

மலைப் பகுதிகளில், சந்தைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் முகக்கவசம் அணியாமல் கூடுவது கவலைக்குரியது என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் கொரோனா முதல் அலையின் பாதிப்பு குறைந்தநிலையில், நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியது. அனைத்து நடவடிக்கைகளும் முன்பைப் போலவே நடைபெற்றன.

  இந்தநிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாவது அலையை வீரியத்தை எதிர்கொள்ள முடியாமல் இந்திய சுகாதாரத்துறை திணறியது. இந்தநிலையில், தற்போது கொரோனா இரண்டாவது முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், சில வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

  கொரோனா பாதிப்பு குறைந்துவருவதால் அனைத்து மாநிலங்களும் தளர்வுகளை அறிவித்துள்ளனர். அதனால், பொதுமக்கள் முன்பைப் போல முகக்கவசம் இல்லாமல் பொது இடங்களில் கூடுவதைப் பார்க்க முடிகிறது. வடகிழக்கு மாநிலங்களின் மலைப் பகுதிகளில் பொதுமக்கள் முகக் கவசம் இல்லாமல் கூட்டமாக கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்தநிலையில், பிரதமர் மோடி எட்டு வட கிழக்கு மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

  அப்போது அவர், ‘பொது இடங்களில் மக்கள் முகக் கவசங்களை அணியவேண்டியது மிகவும் அவசியமானது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்கவேண்டும். கொரோனா மூன்றாவது அலையைத் தவிர்க்க மக்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யவேண்டும். கொரோனா பாதிப்பால் சுற்றுலா, வணிகம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால், மலைப் பகுதிகளிலும், சந்தைகளிலும் பொதுமக்கள் முகக்கவசம் இல்லாமல் கூட்டமாக கூடுவது என்பது சரியானது அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா வைரஸ் அதுவாகவே அதுவாகவே செல்லவில்லை. விதிகளைப் பின்பற்றாமல் நடந்து நாம்தான் அதனை நம்முடன் கூட்டிச் செல்கிறோம். முககவசம் அணியாமல் இருத்தல், கூட்டமாக கூடுதல் போன்ற கவனக்குறைவான நடவடிக்கைகள் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். கூட்டத்தைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: